2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மும்மொழிகளிலும் உத்தரவாதம்

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனனி ஞானசேகரன்

நீண்டகாலப் பாவனைப் பொருட்களுக்கான உத்தரவாத அட்டைகளை, எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து, மூன்று மொழிகளிலும் வெளியிடுவது கட்டாயப்படுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரத்ன கூறினார்.

இந்த ஒழுங்கு விதி, இலங்கை அதிவிசேட வர்த்தமானி 1964/43 மூலம் அமுலுக்கு வந்துள்ளது எனவும் அவர் கூறினார். 

நீண்டகால பாவனைப் பொருட்கள் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்குப் பல பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, உத்தரவாத அட்டைகள் ஆங்கில மொழியில் மாத்திரம் இருப்பதனால், அவற்றை விளங்கிக்கொள்வதில் அம்மொழியறிவு அற்றோர், பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்பது தொடர்பாகவே இருந்தது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹஸித்த திலகரத்ன, 'இவ்விவகாரம் குறித்து, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கவனத்துக்கொண்டு வந்த பின்னர், நான் இந்த ஒழுங்கு விதியை நடைமுறைப்படுத்த அதிகாரமளித்தேன்' என்றார். 

'அத்துடன், நுகர்வோரின் தகவல் அறியும் உரிமையைப் பலப்படுத்துதலில் இதுவொரு  முன்னேற்றகரமான நடவடிக்கையாக அமைந்துள்ளது' என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .