2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மார்பு கச்சைக்குள் ஹெரோய்ன்

Gavitha   / 2016 மே 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொடை பகுதியில், தன்னுடைய மார்புக் கச்சைக்குள் ஹெரோய்னை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை பொலிஸார் பெண்ணொருவரைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 கிராமும் 420 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்னை மீட்டதாகவும் அந்தப் பெண் 54 வயதையுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இவர் ஹெரோய்ன் விற்பனை செய்து வருவதாகவும் இதற்கு முன்னர் இவர் பலமுறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தாகவும் குறிப்பிட்ட பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X