2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாலைத்தீவு ஜனாதிபதி கொலை முயற்சி: இலங்கையர் உட்பட மூவர் விடுதலை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட மூவரை அந்நாட்டு பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (21) விடுதலை செய்துள்ளனர் என்று  மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறிவைத்துச் சுடுவதற்காக இலங்கையர் ஒருவரை மாலைத்தீவுக்கு அழைத்துச்சென்ற சிலரே, அவர் மூலமாக மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும், போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

மாலைத்தீவில் ஆகவும் கூடுதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினத்துக்கு அடுத்த நாளன்று, மேற்படி இலங்கையரையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X