2025 மே 22, வியாழக்கிழமை

மேல் மாகாண சபையின் பாதீடு நிறைவேற்றம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபையின் வரவு- செலவுத்திட்டம், ஏகமனதாக இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மேல் மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுகான வரவு- செலவுத்திட்டத்தின், சுகாதார அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு யோசனைகளை தோல்வியடைந்தன. சுகாதார அமைச்சராகவிருந்த அமைச்சர் நிஷாந்த வர்ணசிங்கவின், யோசனைகளே தோல்வியடைந்தன.

இதனையடுத்து அவருக்கீழுந்த அமைச்சு, மேல் மாகாண சபையின் ஆளுநரினால் முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிடம் கைளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவ்வமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு யோசனைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேல் மாகாண சபையில் இன்று விசேட அமர்வு இடம்பெற்றது.

சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீட்டு யோசனைகள், இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள், அவைக்கு சமூகமளித்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X