Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
Habitat for humanity நிறுவனத்துனேயே இந்த ஒப்பந்தம் கடந்த 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
'வீடுகளிலிருந்து இல்லங்களை நோக்கிய அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் இக்கருத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ 14 மில்லியன் நன்கொடை நிதிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்படவிருக்கின்றது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமைத்துவத்திலும் வழிகாட்டலிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2018வரையிலும் அமுலாக்கப்படும். இதன் கீழ் இடம்பெயர்ந்த மக்கள், 15,345 நிரந்தரமான வீடுகளைப் பெறுவர்.
300,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கட்டட நிர்மாண பயிற்சி மற்றும் நுன்பாக கடன்கள், சமூக உட்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதார பலாபலன்களையும் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கருத்திட்டத்தின் கீழ் கட்டட நிர்மாணத்துக்கான மூலப்பொருட்கள், ஊழியம் என்பன உள்நாட்டில் பெறப்படுவதனால் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பினைச் செய்யும் கருத்திட்டமாக இது அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .