2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

முள் தலைக்கவசம்: இருவர் சிக்கினர்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை மூடியணியும் தலைக்கவசத்தில் (ஹெல்மட்), இரும்புக் கம்பிகளிலான முட்களைச் செருகி, பல்வேறான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வைத்தே, இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பிகளிலான இந்த முட்கள், சுமார் ஒன்றரை அங்குலம் நீளமானவை என்றும், முகத்தை மூடியணியும் அந்தத் தi-லக்கவசத்தால் தாக்குதல் நடத்தி அல்லது தலையில் முட்டிமோதியே, அவ்விருவரும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுவந்ததாக அறியமுடிகின்றது.

இவ்வாறான கொலைச் சம்பவமொன்று எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என்றும், இந்த முகத்தை மூடியணியும் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தி மோட்டார் சைக்கிளொன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டுமன்றி நகைகளைக் கொள்ளையடிப்பதற்கும் மற்றும் மக்களின் சொத்துக்குகளை சூறையாடுவதற்கும் முகத்தை மூடியணியும் இந்த தலைக்கவசமே பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X