2025 மே 21, புதன்கிழமை

மக்களின் கருத்தறிந்து எல்லைகளை நிர்ணயம் செய்யவும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பான சர்வகட்சி மாநாடு, பத்தரமுல்ல தலவத்துகொட கிரேன்ட் மொனார்ச் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 64 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்ற இந்த சர்வக்கட்சி மாநாட்டில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

அங்கு, ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

எல்லை நிர்ணயக் குழுவானது தனது பொறுப்புக்களை பக்கச் சார்பின்றியும் நியாயமாகவும் நிறைவேற்ற வேண்டும். முன்பிருந்த குழுமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் புதிய குழுவின்மீது சுமத்தப்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்;.

குறுகிய கால எல்லையினுள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது எதிர்பார்க்கப்படும் பணியினை உரியவாறு மேற்கொள்ள முடியாதபோது அது பயனளிக்காது எனவும், போதியளவு காலம் ஒதுக்கப்பட்டு இந்நடவடிக்கைகள் சரியான முறையில் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும்.

நீண்டகாலமாக தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டாகவும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்ற வேட்பாளர்கள் தெரிவு செய்யும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி கலந்துரையாடி தேவையான சட்ட விதிகளை தயாரிக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா, எல்லை நிர்ணயம் தொடர்பான அமைச்சரவை உப-குழுவின் தலைவர் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .