2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மக்களின் தோளில் பாரத்தை சுமத்தேன்: ஜனாதிபதி

Kanagaraj   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு இன்னல்களை தரும் எந்தவிதமான வரி அதிகரிப்புகளுக்;கும் தான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்  என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வரி அதிகரிப்பு  யோசனைகளை முன்வைக்கும் பொருளியல் நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்களை வீட்டுக்கு அனுப்புவேனே தவிர, அவ்வாறானவர்களின் யோசனைகளை நாட்டின் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு பெற்றுக்கொள்ளத் தான் தயாரில்லை என்றும் அவர் கூறினார்.

பொலன்னறுவை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'வற் வரி திருத்தத்துக்கு அரசாங்கம் தயாராவதாக, ஊடகங்கள் சில அறிக்கையிட்டிருந்தன. எனினும், ஏழை எளிய மக்களுக்கு இன்னல் தரும் எந்தவிதமான வரி அதிகரிப்புக்கு நான் இடமளிக்கமாட்டேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .