2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

மக்களே அவதானம்!

S.Renuka   / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.

இது  தொடர்பில் சமில் முத்துகுட மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் பரவும் கடுமையான ஆபத்து நிலவுகிறது.

அதேபோல், தொற்று அல்லாத நோய்களிலும் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்குச் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளின் சிகிச்சை நிலைமைகள் தற்போது குழப்பமான நிலையை அடைந்துள்ளன.

அவர்களின் மருந்துகள் இந்த அனர்த்த நிலைமை காரணமாகத் தொலைந்திருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X