2025 மே 09, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு எச்சரிக்கை!

Simrith   / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் நில்வள, குடா, ஜின் கங்கைகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால், குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள்  அவதானமாக செயற்படுமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நில்வள கங்கைக்கு அருகிலுள்ள  கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

அத்துடன், குடா கங்கைக்கு அருகிலுள்ள பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜின் கங்கைக்கு அருகிலுள்ள வெலிவிட்டிய திவித்துர, பத்தேகம, நியகம நெலுவ, தவலம, நாகொட,  எல்பிட்டிய பொப்பே பொட்டல பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X