2025 மே 08, வியாழக்கிழமை

“மக்களின் தீர்ப்பை மதிக்கத் தயார்”

S.Renuka   / 2025 மே 07 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் தீர்ப்பை மதிக்கத் தயாராக இருப்பதாகவும், ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு  இன்று புதன்கிழமை (07) ஆற்றிய சிறப்பு உரையின் போதே அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், "மக்களின் தீர்ப்பிற்கு நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன்.
பொதுமக்களுக்கு வெளிப்படையான மற்றும் பயனுள்ள சேவை வழங்கலை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதற்கு நான் பாடுபடுகிறேன்.

மோதல் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். என்றும்  அரசியலுக்கான கூட்டு அணுகுமுறையை மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X