2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு த தவிசாளர் இதனை கூறியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை நடத்திச்செல்வது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துதல், தெரிவுசெய்யப்பட்ட தொகுதிகளில் முன்கூட்டியே வாக்களிக்கின்றமைக்கு சந்தர்ப்பமளித்தல் மற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகளை நிறுவுதல் ஆகியன தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், பாராளுமன்ற விசேட செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

09 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து 03 வருடங்கள் கடந்துள்ளதுடன், அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பாக பரிந்துரையை வழங்குமாறு சட்டமா அதிபரிடம் தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பிலான பாராளுமன்ற விசேட செயற்குழு

அண்மையில் கோரிக்கை விடுத்தது. இதேவேளை, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வழியுறுத்தியுள்ளார். சில அரசியல் கட்சிகள் மாவட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான அளவுகோல்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் என்ற ரீதியில் அரசியல் கட்சிகளை வகைப்படுத்தி, அவற்றைப் பதிவுசெய்வதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களைக் கையளிக்கும்போது ஏற்படுகின்ற தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆகக் குறைந்தது 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது தெரிவித்துள்ளது.

சுயேச்சைக் குழுக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பணம்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் நீடிக்கப்பட வேண்டும் என்பதும் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக இருந்தது. கட்டுப்பணம் செலுத்தும் நடைமுறை காலத்துக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .