2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மகனை தேடிய தந்தை மரணம்

Editorial   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தையொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.  

வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த வையாபுரி சந்திரன் (வயது 69) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.  

அவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பப்டிருந்தார்.  

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.   

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X