2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

மகனின் கோடாரி தாக்குதலில் தாய் மரணம்

Janu   / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம், மதவாச்சி, இசென்பெஸ்கல பகுதியில் உள்ள வீடொன்றில் மகனின் கோடாரி தாக்குதலால் 81 வயதுடைய தாய் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (27) அன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த , 7 பிள்ளைகளின் தாயான 81 வயதுடைய பண்டாகே ஹின்னிஹாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்த தாயின் ஆறு பிள்ளைகளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவர், 59 வயதுடைய தனது  மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மகன் தொடர்ந்து தாயைத் துன்புறுத்தி, பணம் கேட்டு தகராறு செய்துள்ளதுடன் செவ்வாய்க்கிழமை அன்று (27) அதே போல  வாக்குவாதம் ஏற்பட்டு,  மகன் தாயை கோடரியால் தாக்கியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது தாயைப் பார்க்க வந்த மகள், தாயார் படுக்கையிலேயே இறந்து கிடப்பதை கண்டு இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.    

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .