Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 04, சனிக்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட பின்னர் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பில் மல்வத்து பீட அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரரரும் கலந்து கொண்டதுடன் அவர் ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அஸ்கிரி பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.
முதியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண, முருந்தெணியே தம்மரதன தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினார்கள். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago