2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மகிழ்ச்சியான செய்தி....

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரும் ஏப்ரல் மாதமளவில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்கள் நிம்மதி அடைவார்கள் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (21) கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் மாதம் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

“கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். அந்தச் சலுகைகளை வழங்குகிறோம்’’ என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X