2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மக்கள் வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவரான சுஜாதா துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு,  காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை , இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும்,  கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .