2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மசூர் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா,எஸ்.எம்.அறூஸ்

முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் செனட்டருமான மர்ஹூம் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கொழும்பு சுவடிக்கூட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நினைவுச் சொற்பொழிவு ஆற்றுவார். அத்துடன், தமிழ்- முஸ்லிம் ஐக்கியத்தின் குறியீடாக வாழ்ந்து மறைந்த செனட்டர் மசூர் மௌலானாவின் அர்ப்பணிப்பு மிகுந்த போராட்ட வரலாறு என்ற தலைப்பில் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சிறப்பு சொற்பொழிவு ஆற்றுவார்.

மேலும், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர், டாக்டர் ஏ.உதுமாலெப்பை உட்பட மற்றும் பல அரசியல் தலைவர்களும் நினைவுப்பேருரை ஆற்றவுள்ளனர்.

இதன்போது செனட்டர் மசூர் மௌலானாவின் அரசியல் பொது வாழ்வைப் பிரதிபலிக்கும் குறுந்திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X