2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகின்றது

Freelancer   / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கிலிருந்து மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல் இன்று (17)  நாட்டை வந்தடையவுள்ளது.

9750 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பலே வருகை தருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயுர நெத்திகுமார தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் இவ்வாறு எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலுமொரு எரிபொருள் ஏற்றிய கப்பல் இந்த மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயுர நெத்திகுமார குறிப்பிட்டார்.

இதனிடையே, அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏற்றிய கப்பலொன்று அடுத்த மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது.

அதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக மயுர நெத்திகுமார தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .