2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மசாஜில் கத்தியை அங்​க வைத்து கொள்ளை

Editorial   / 2025 ஜூலை 31 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மசாஜ் நிலையத்திற்குள் வாள் மற்றும் கத்தியுடன் மூன்று பேர் நுழைந்து, காசாளரின் கழுத்தில் கத்தியை வைத்து  பண இலாச்சியில் இருந்த ரூ. 60,000 மற்றும் இரண்டு மொபைல் போன்களை கொள்ளையடித்துச் சென்றதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

களனி டயர் சந்தி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்திலேயே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர்.

மசாஜ் நிலையத்தின் சிகிச்சையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மசாஜ் நிலையத்தில் சேவைகளைப் பெறுவதற்கான காரணத்தை போலியாக கூறி மூன்று சந்தேக நபர்களும் உள்நுழைந்து  கொள்ளையடித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .