2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மட்டக்குளியில் அறுவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி பர்கியூஷன் வீதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு திருட்டுத்தனமாக நீரைப்பெற்ற அறுவர், கிரேண்ட்பாஸ்  பொலிஸாரால், இன்று(11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் இணைந்து, சுமார் 300 வீடுகளை சோதனையிடப்பட்டதன் பின்னரே, சந்தேகநபர்களை   கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின்  வீடுகளில், நீர் இணைப்புக்கான மீற்றர் பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நீருக்கான கட்டணமாக 28,000 ரூபாயை செலுத்த வேண்டி இருந்த நிலையில்,  அதனை உரிய தினத்தில் செலுத்த தவறியதையிட்டு,  நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், திருட்டுத்தனமாக  வேறு ஒரு குழாயிலிருந்து நீரை பெற்றுள்ள சம்பவம் ஒன்றும் இதன்போது பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .