Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 21 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சனத் கமகே
பல வருடங்களுக்கு முன்னர், மண்ணில் புதைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட 1,050 அடையாள அட்டைகள் இன்று, திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
அம்பலாந்தோட்டை பெமினியன்வில, நுகசெவன பிரதேசத்தில் கட்டுமானப் பணிக்காக மண் அகழ்ந்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரத்தின் கீழ், குறித்த அடையாள அட்டைகள் சிக்கியுள்ளன.
மண் அகழ்ந்துக்கொண்டிருந்த போது, பெக்கோ இயந்திரத்தில் மண் அள்ளும் பகுதியில் பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட பொதிகள், மண்ணுடன் அள்ளுண்டதாக, பெக்கோ இயந்திரத்தின் சாரதி தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டைகள், உஹபிட்டிகொட கிராம அதிகாரி ஏ.கே.நுவன் ஷந்தனவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், பொலிஸாரக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, அடையாள அட்டைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
தேசிய அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டைகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
அந்த அடையாள அட்டைகள், மாமடுல்ல, பெமினியன்வில, ஹங்கன்வகுர, பன்சலகம, வலேவேவத்த ஆகிய முகவரிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago