2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மணல் அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை எளிதாக்க குழு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல், மண், சரளை மற்றும் களிமண் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் முறைமையை எளிமைப்படுத்துவது தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் முறைமை, சிக்கலான தன்மை கொண்டது என்பதால், பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெறுவதாக  சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

அதனை நிறுத்துவதற்கும் மிகவும் திறமையான முறையின் விரைவாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த திட்டம் விரைவுபடுத்தப்படும் என்றும் செயலாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .