2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மாணவனுடன் அடிக்கடி உல்லாசம்: 40 வயது ஆசிரியை செய்த லீலை

Editorial   / 2025 ஜூலை 04 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது,

குறிப்பாக பாடசாலைகள்,கல்லூரி,வேலை செய்யும் நிறுவங்களின் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களும் நடந்து வருவதை நம்மால் செய்திகள் மூலம் பார்க்கமுடிகிறது,அதுமட்டுமல்லாமல் பாடசாலை மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பல ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைதும் செய்யப்பட்டுள்ளனர்,

அதுமட்டுமல்லாமல் பாடசாலை,கல்லுரிகளில் படிக்கும் மாணவர்களை ஆசிரியைகள் தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பங்களும் அரங்கேறின. இந்தநிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறி உள்ளது.

மும்பையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் திருமணமான 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு செய்த பாலியல் கொடுமைகள் வெளிவந்துள்ளன.

அதாவது அந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த நடன நிகழ்ச்சிகளின்போது, ஆசிரியைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த மாணவனுடன் ஆசிரியை நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் அவனிடம் ஆசிரியை அத்துமீறி ஆபாசமாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், ஆசிரியையுடன் பேசுவதை நிறுத்தி உள்ளான்.

இதுபற்றி ஆசிரியை தனது தோழியிடம் கூறி புலம்பி உள்ளார். இதையடுத்து அந்த தோழி, மாணவனை சந்தித்து பேசியுள்ளார். வயதான பெண்களுக்கும், பதின்ம வயது சிறுவர்களுக்கும் இடையேயான உறவு தற்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது, இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, நீ பேசாமல் இருப்பதால் ஆசிரியை மிகவும் மனஉளைச்சலில் இருக்கிறார், என்றெல்லாம் கூறி மாணவனின் மனதை அவர் மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆசிரியையுடன் மாணவன் மீண்டும் பேசத்தொடங்கி உள்ளான்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியை, மாணவனை ஒரு சொகுசு ஓட்டலுக்கு அழைத்துச்சென்று அவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது மாணவனுக்கு கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஆசிரியை அவனது பதற்றத்தை போக்க சில மாத்திரைகள் கொடுத்துள்ளார். மாணவன் 10-ம் வகுப்புக்கு சென்ற பிறகும் அவனை அடிக்கடி சொகுசு ஓட்டல் களுக்கு அழைத்து சென்று தனது லீலையை தொடர்ந்துள்ளார். உல்லாசத்திற்கு முன் மது அருந்திவிட்டு அவனிடம் அத்துமீறுவதையும் ஆசிரியை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந் தநிலையில் சிறுவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், ஆசிரியையின் சல்லாப வேலைகளை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சில மாதங்களில் அவன் 10-ம் வகுப்பை முடித்து விடுவான், அதற்கு பிறகு பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்து அவர்கள் அமைதி காத்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றான். இதையடுத்து குடும்பத்தினர் சிறுவனை பள்ளியை விட்டு நிறுத்தினர். இதனால் சிறுவன் மனஅழுத்தத்துக்கு ஆளானதாக தெரிகிறது.

இதற்கிடையே அந்த மாணவனை மறக்க முடியாமல் பள்ளி ஆசிரியை தவித்தார். இதுதொடர்பாக ஆசிரியை தனது வீட்டு வேலைக்காரர்கள் மூலம் மாணவனுக்கு தூது விட்டார். இதை அறிந்த குடும்பத்தினர் இனிமேலும் மவுனம் காப்பது சரியில்லை என பொங்கி எழுந்தனர். உடனடியாக ஆசிரியை மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் ​பொலிஸார் சம்பந்தப்பட்ட 40 வயது ஆசிரியை மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியையின் தோழி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னிடம் படிக்கும் மாணவனிடமே ஓராண்டுக்கும் மேலாக உல்லாச உறவு வைத்த பள்ளி ஆசிரியையால் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .