2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்திய வங்கியின் நடவடிக்கைகளை ‘தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் மத்திய வங்கியின் பணிகளைத் தனியார்மயப்படுத்தும் முயற்சி தொடர்பான மேலதிக தகவல்கள், மிக விரைவில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே, மஹிந்த எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கியின் இந்தப் பொறுப்பை இல்லாது செய்வது, அரச நிதி நிர்வாகம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை இல்லாது செய்யுமென அவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் 146ஆவது பிரிவின் கீழ், அரச நிதி தொடர்பான அதிகாரம், நாடாளுமன்றத்துக்கே காணப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.  

“மத்திய வங்கியின் கண்காணிக்கும் பொறுப்பு, முக்கிய அரசாங்க அலுவலர்களின் தனிப்பட்ட நண்பர்களால் உரிமைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனமொன்றுக்குக் கையளிக்கப்பட உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.  

2002ஆம் ஆண்டு பதவியில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அரச சொத்துகளை விற்றதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போது இந்த நடவடிக்கைகயை மேற்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .