2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மத்தல மான்களுக்கு வலைவீச்சு

Gavitha   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்திலுள்ள மான் கூட்டத்தை அங்கிருந்து அகற்றி, காட்டில் விடுவதற்கான திட்டமொன்றை வகுக்குமாறு பேராசிரியர் சரத் கொட்டகமவிடம் வனவிலங்குகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

விமான நிலையத்தின் ஓடுபாதை மற்றும் பாதுகாப்பு வேலி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மான் கூட்டம் காணப்படுகின்றது. அதனால், இப்பகுதியை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த வாரம், மத்தல விமான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி மான் கூட்டத்தை அங்கிருந்து அகற்றி காட்டில் விடுமாறு வழங்கிய ஆலோசனைக்கமையவே, அமைச்சரினால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X