Freelancer / 2026 ஜனவரி 22 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாகவும், மத்திய மலைநாட்டை விரைவாகப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதுடன், காடுகளை மீண்டும் வளர்க்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் குறித்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
டித்வா சூறாவளி காரணமாக மத்திய மலைநாட்டில் சுமார் 4,000 மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக இடம்பெற்ற முறையற்ற நிர்மாணம், பயிர்ச்செய்கை மற்றும் பராமரிப்பு இல்லாததால் இது ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரைவான தேசியக் கொள்கையின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடைய சட்டத்தின் மூலம் வலுப்படுத்தப்பட்ட அதிகார சபையின் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த நடவடிக்கைகளுக்கு நிதியமொன்றை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்நாட்டு பணிப்பாளர் அலுவலகப் பிரதானி Cholpon Mambetova, அதன் விவசாயம் மற்றும் இயற்கை வள சிரேஷ்ட நிபுணர் Sumith Pokhrel, உதவி திட்ட அதிகாரி கிருஷாந்தி தாபரே ஆகியோருடன்,
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Azusa Kubota, அந்த திட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வகீஷா குணசேகர,சுகந்தி சமரசிங்க, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர், பெருந்தொட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியலாளர் எல். குமுது லால் போகஹவத்த மற்றும் துறைசார் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். (a)

17 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
22 minute ago
29 minute ago