Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் 16 மாடிகளைக் கொண்ட பழைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி (Lightning Conductor) அமைப்பின் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட கம்பிகளில் சுமார் 30 கிலோ கிராம் எடையுள்ள பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மொத்த செப்பு கம்பிகளின் நீளம் 288 மீற்றர் எனவும், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 42 இலட்சம் ரூபாய் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிருவாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரால் கடந்த மாதம் 27 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
09 Mar 2026