2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மதுபானம் அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஜூலை 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோயின் உபாதை காரணமாக மதுசாரம் அருந்திய குடும்பத்தார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்  யாழ்ப்பாணம் மடத்தடியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அழகரட்ணம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

மேற்படி குடும்பத்தர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் இவர் மதுசாரம்  அருந்தினால் இறந்து விடுவார்  என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உபாதை காரணமாக வீட்டிலிருந்து சென்ற அவர் அப் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு அருகாமையில் மதுசாரம் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் காணப்பட்ட சம்பவ இடத்துக்கு நேற்று புதன்கிழமை காலை சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .