Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்து, விஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியிருந்து, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், ஒழுக்கமுறைக்கு முரணான வகையில் மதம் மாற்றுவதில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை(17) தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பிரஜைகள் 159 பேர், சீனப்பிரஜைகள் 107 பேர் அடங்கலாக வெளிநாட்டுப் பிரஜைகள் 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, நேற்று(17) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வந்து வீதிகளில் பிச்சை எடுத்துத் திரிந்த வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில், புத்திக பத்திரண எம்.பி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சமய மாற்றத்தில் ஈடுபட்டமைக்காக, ஐந்து வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.
இந்தியா, பிரான்ஸ், தாய்லாந்து, இத்தாலி, மலேசியா, பிலிப்பைன்;ஸ், சீனா, பங்காளதேஷ் மற்றும் அமெரிக்காக ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர், தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago