2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

மாதவிடாய்க் கால விடுப்பு

Editorial   / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதவிடாய்க் காலத்தில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது.

அத்தகைய விடுப்பு வழங்கும் முதல் தென்னிந்திய மாநிலமாக அது திகழ்கிறது.

புதிய அறிவிப்பின் கீழ் அரசாங்க, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்கள் மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மருத்துவச் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை.

அத்திட்டம் அதிகாரபூர்வமற்ற இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாதவிடாய் விடுப்பு என்பது புதிதல்ல. ஸ்பெயின், ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது ஏற்கனவே அமலில் இருக்கிறது

சில இந்திய மாநிலங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மாதவிடாய்க் கால விடுப்புகள் வழங்குகின்றன.

அவற்றில் குறிப்பாக பீகார், ஒடிஷா,ஆகியவை அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் மாதத்தில் 2 நாள்கள் விடுப்பு வழங்குகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X