2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூவர் மறியலில்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குரங்கெத்த பகுதியில், மதுவரி திணைக்கள அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் வலப்பனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அங்குரங்கெத்த- ரிகில்லகஸ்கட பகுதியில் மதுபான நிலையம் ஒன்றை திறந்து மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அதனை தடுப்பதற்காக அங்கு சென்றிருந்தபோதே, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து போரா 12 ரக துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X