2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மதுபானசாலையில் வாள்வெட்டு: இருவர் காயம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று (16)  இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில்  காயமடைந்துள்ளனர். 

நெடுந்தீவு மதுபானசாலையில் இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர்குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழுமீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டுபேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  பொலிஸார் மீதும் வாள்வெட்டுக்குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது ஒருவர் கைதுசெய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச்சென்றவர்களை தேடி கைது செய்யும் வகையில் பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X