2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுஷ் – அமல் - நாலக்கவின் தொடர்புகள் குறித்து விசாரணை

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷி, பிரபல பாடகர் அமல் பெரேரா ஆகிய இருவருடன் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, எவ்வாறான தொடர்புகளைப் பேணிவந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

சர்வதேச பொலிஸார் ஊடாக, அவ்வாறான விசாரணைக​ள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மாகந்துரே மதுஷி, பிரபல பாடகர் அமல் பெரேரா ஆகிய இருவரும், டுபாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவ்விருவருடன், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க எவ்வாறான தொடர்புகளைப் பேணிவந்தார் என்பது தொடர்பில் தகவல்களைப் பதியவேண்யுள்ளதென்றும், அதனை, சர்வதேச பொலிஸாரின் தலையீட்டுடன் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடகர் அமல் பெரேராவுக்கும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்கவுக்குமிடையில், 2016ஆம் ஆண்டில் தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதென, குற்றப்புலனாய்வு அதிகாரிகள், மேலும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, ஆகியோரை படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நேற்று (13) அழைக்கப்பட்டபோதே, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதேவேளை, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜை மர்சலீஸ் தோமஸ் ஆகிய இருவரின் விளக்கமறியல்களும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது சந்தேகநபரான இந்தியப் பிரஜையை குற்றச்சாட்டுகளின் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தான் கடுமையான நிலைப்பாடொன்றை எடுக்கவேண்டிவரும். ​ஆகையால், அடுத்த வழக்குத் தவணையின் போது குற்றச்சாட்டுகளை எழுத்துமூலமாக அறிக்கையிடுமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு, நீதவான் கட்டளையிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .