2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

’மின் கட்டண அதிகரிப்புக்கு நாம் பொறுப்பல்ல’

Freelancer   / 2026 ஜனவரி 07 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே கட்டத்தில் மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று   மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06)  அன்று மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதமளவில்  முழுமையான மின்னுற்பத்தி மற்றும் மின் விநியோகத்துக்கு 1,37,016 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே  11.57 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளது. மின்சார சபையின் சட்டத்துக்கு அமைவாகவே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மின் கட்டணத்தை அதிகரிப்பதால் குறைந்த வருமானம்  பெறுபவர்கள், நடுத்தர மக்கள் மற்றும் தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து  மின்சார சபை மதிப்பிடவில்லை. ஒரே கட்டத்தில் மின்கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை. ஒரு மின் அலகுக்கான கட்டணத்தை  25 ரூபாய் அளவில் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைவதற்கு மின்சார கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மின்கட்டணம் அதிகரிப்பு பற்றி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .