Freelancer / 2026 ஜனவரி 07 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள், சிறிய தொழில்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) அன்று நிலையியற் கட்டளையின் கீழ் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு, தமது கொள்கையை வடிவமைத்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டு, மக்கள் அபிலாஷைகளைக் கிடப்பில் போட்டு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 11.57 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUC) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இலங்கை மின்சார சபையின் இழப்புகளை ஈடுகட்டும் நோக்கிலா என்றும் வினவினார்
இவ்வாறு மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள், சிறிய தொழில்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அதிகரித்து வரும் மின்சாரச் செலவுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளனவா? அவற்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா எனக் கேட்டார்.
4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026