2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் கொள்ளை

R.Tharaniya   / 2025 நவம்பர் 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சனிக்கிழமை (15) அன்று மாலை இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதம்பை, பொதுவில பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே சோமாவதி (வயது 72) என்ற பெண் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

சம்பவம் நடந்த நேரத்தில் தனது கணவரும் மகளும் வீட்டில் இல்லை என்றும், மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து தப்பிச் சென்றதாகவும் கொள்ளையர்களை தனக்குத் தெரியாது என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.  

எம்.யூ.எம்.சனூன்
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X