2025 ஜூலை 16, புதன்கிழமை

முன்னாள் அமைச்சரின் கொலை வழக்கில் திருப்பம்

S.Renuka   / 2025 ஜூலை 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை - தம்புல்கமுவவில் 18 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்  கொலை செய்தமை மற்றும் கொலைக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வலுவற்றதாக்கும் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி  சட்டமா அதிபர் தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு திங்கட்கிழமை (14) அன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மகிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவின் அமர்வில்  அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த மற்றொரு திகதியை வழங்குமாறு நீதிபதிகள் குழாமிடம் கோரிக்கை விடுத்தார்.

1999 ஆம் ஆண்டு மாத்தளை தம்புல்கமுவ பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்தக் குற்றப்பத்திரிகைக்கு எதிராக ஜனக பண்டார தென்னகோன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தக் குற்றப்பத்திரிகை சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்து,

2020ஆம் ஆண்டு ரிட் உத்தரவைப் பிறப்பித்து, அதை செல்லாததாக்கியது. சட்டமா அதிபர் தனது சிறப்பு மேன்முறையீட்டு மனு மூலம், இந்தத் தீர்ப்பை சட்டத்திற்கு முரணான உத்தரவாக இரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X