2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மனைவி படுகொலை; கணவன் கைது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்காபத்தனை கிராமத்தில் மனைவியை பொல்லால் தாக்கி படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணவனைக் கைது செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09) மாலை 06.30 மணியலவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில்,
இரண்டு பிள்ளைகளின் தாயான யூ.எம்.கீத்தானி சகுந்தலா (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

52 வயதுடைய கணவனைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சடலம் மரண விசாரணைகளின் பின் பிரதே  பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X