Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 மே 08 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், இந்தியா பாதுகாப்பு படைகள் சார்பாக பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. நிலம், வான் மற்றும் கடல் எல்லைகளில் தனது பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தியுள்ளது.
multi-layered air defence network எனப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் ரோந்து செல்வது, ஹெலிகாப்டர்கள் தாழ்வாக ரோந்து செல்வது, ட்ரோன்கள் ஏவுகணைகளுடன் தயாராக இருப்பது, எஸ் 400 போன்ற ஏவுகணை மற்றும் ஏவுகணை மறிப்பு சிஸ்டங்கள் தயார் நிலையில் இருப்பது என்று பல கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க பாரா மிலிட்டரி ராணுவ வீரர்களின் விடுப்புகள் நீக்கப்பட்டு உள்ளன. புதிதாக விடுப்பு எடுக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விடுப்பு எடுத்தவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அவரவர் போஸ்டுகளுக்கு உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியா நீண்ட போருக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மாறி மாறி மோதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.
சென்னையில் இன்று இரண்டு இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மணலி சிபிசிஎல் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. நேற்று நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையத்திலும் நேற்று போர்க்கால ஒத்திகை நடைபெற்றது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் கூட்டம் நடைபெறுகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago