2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு

Thipaan   / 2016 ஜனவரி 02 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 730 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தனது பீகொக்(மயில்) மாளிகையை கொடுக்க முன்வந்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலஞ்ச, ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு திங்கட்கிழமை(04) ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கோடீஸ்வர வர்த்தகரும் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, ராஜகிரியவிலுள்ள தனது பீகொக் மாளிகையை அவருக்கு வழங்க ஏ.எஸ்.பி லியனகே முன்வந்திருந்தார்.

எனினும், இறுதி நேரத்தில் அந்த மாளிகையை மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலேயே தாம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X