Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 27 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நானாட்டான் நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் சிறுவனுடன் சென்ற பெண் ஒருவர் சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தாலிக்கொடியை (நகை) திருடிச் சென்றுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (25) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,
குறித்த வீட்டிற்கு சிறுவனுடன் சென்ற பெண் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். வீட்டார் பணம் வழங்கிய நிலையில் குடிக்க நீர் கேட்டுள்ளார். குடிக்க நீர் கொடுத்த பின்னர் தான் சாத்திரம் பார்த்து கூறுவதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கும் சாத்திரம் பார்த்துள்ளார்.
இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசி வீட்டிலிருந்த பெண் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.
அதனையடுத்து மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவனுடன் குறித்த வீதியால் சென்ற CCTV வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
5 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago