2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

மியன்மாரில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் மியாவாடி பகுதியில் உள்ள இந்த சைபர் கிரைம் மோசடி முகாம்கள் தீவிரவாதிகளால் இயங்கி வருகின்றன.

சுற்றுலா விசாவில் மியன்மாருக்க சென்ற இலங்கையர்களே இவ்வாறு சைபர் கிரைம் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .