Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோல் குண்டுகள் , வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் உள்ள மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல் , வாள் ஒன்று , சைக்கிள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன.
குறித்த பகுதியில், இராணுவத்தினர் ரோந்து சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் சோதனை நடத்திய போதே குறித்த பொருட்களை மீட்டு , தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இளைஞர் ஒருவர், நேற்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
12 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago