2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மரண அச்சுறுத்தல்: உயரதிகாரிகளை இன்று சந்திப்பேன்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைபேசியின் ஊடாகத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில், பொலிஸ் உயரதிகாரிகளை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 'சபாநாயகர் அவர்களே, உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக நேற்றைய தினம் (புதன்கிழமை) அறிவித்தீர்கள். அதுதொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?' என்று வினவினார்.இதற்கு பதிலளிக்கும் போதே, சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவித்தார். அவர், தொடர்ந்து பதிலளிக்கையில்,

'மரண அச்சுறுத்தலுக்கு நான் அஞ்சேன், அரசியலால் குண்டடிபட்டவன் நான், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில், எனது பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளேன். அதுதொடர்பில் இன்று (நேற்று) நடவடிக்கை எடுப்பதற்கு நேரமில்லை என்றார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு இன்று (நேற்று) வழங்கப்பட்ட 81 வினாடிகளில் 61 வினாடிகள், இணைந்த எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X