2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மரண தண்டனைக்கு எதிரான இடைக்கால தடை நீட்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மரணதண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (09) இடம்பெற்றபோது, குறித்த தடையை எதிர்வரும் 2020 மார்ச் 20ஆம் திகதி வரை நீட்டிப்பதாக உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நான்கு பேருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை செயற்படுத்த இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட,  முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய குழாத்தினரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது,  இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பரிசீலிக்கப்படும் என நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .