Freelancer / 2022 ஜூலை 22 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ் பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொரி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
இந்த லொரியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது. பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி இன்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். (a)

58 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
5 hours ago