Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
J.A. George / 2023 ஜூன் 01 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் சடலங்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (31) மாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொலன்னாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, காலி கோட்டை கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணுக்கு 35-40 வயது இருக்கும் என நம்பப்படுகிறது. அவரின் சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago