Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரம் வெட்டுபவர்களை பதிவு செய்வது தொடர்பன விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்திரசிறி விதாரன தெரிவித்தார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
காடு அழிப்பை தடுக்கும் நோக்கில் மரங்களைத் தரிப்பவர்கள் கைகளால் பயன்படுத்தும் சிறிய ஆயுதங்கள் தொடக்கம் வாகனங்களில் பொருத்தப்படும் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு தம்மிடம் இருக்கும் உபகரணங்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என்பதுடன், மார்ச் மாதம் இதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பான விசேட சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago