Editorial / 2025 நவம்பர் 10 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பில் இடம்பெற்ற இராமர் கதாப்பிரசங்கத்தில் மதிப்பிற்குரிய இராமர் கதை சொற்பொழிவாளரும், ஆன்மீக வழிகாட்டியுமான மொராரி பாபு அவர்கள் புருசோத்தம் ஸ்ரீ இராமரின் பக்தி கமழும் செய்தியை இலங்கை எங்கிலும் எதிரொலிக்கச் செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இராமர் யாத்திரையின் இலங்கை அத்தியாயத்தை சிறப்பித்துள்ளார்.
பாக்கு நீரிணையைக் கடப்பதற்கு முன்னர் சிவபெருமானை இராமபிரான் வழிபாடு செய்ததாக நம்பப்படுகின்ற இராமேஸ்வரத்தில் ஆன்மீக சொற்பொழிவை ஆற்றிய பின்னர், பாபு அவர்களும், அவருடைய பக்தர்களும் கடல்கடந்து இலங்கைக்கு வருகை தந்து, இராமபிரானின் தெய்வீக பாதச்சுவடுகளை மீண்டும் பின்தொடர்ந்துள்ளனர்.
நீர்கொழும்பில் திறந்த வெளியில் இடம்பெற்ற சொற்பொழிவு நிகழ்வில், இலங்கையிலும், உலகெங்கிலுமிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டதுடன், பிரார்த்தனை, பக்தி இசை, மற்றும் சிந்தனை ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்குபற்றினர். பாபுவின் சீடர்கள் என அன்புடன் அழைக்கப்படுகின்ற 400 க்கும் மேற்பட்டோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விசேட விமானங்கள் மூலமாக வருகை தந்ததுடன், பக்தியிலிருந்து விடுதலையையும், தர்மத்திலிருந்து வெற்றியையும் குறிக்கும் வகையில் பயணத்தை இராமர் கடல்கடந்து இலங்கைக்கு வருகை தந்தமையின் நவீன கால மறுநிகழ்வை பிரதிபலிக்கச் செய்துள்ளனர்.
இராமபிரானின் வனவாசம், இலங்கைக்கு பிரயாணம் செய்தமை மற்றும் மீண்டும் அயோத்திக்கு சென்றமை ஆகியவற்றின் புனித வழித்தடத்தைக் கண்டறியும் வகையில் 8,000 கிலோமீட்டர் நீண்ட யாத்திரையாக பாபு அவர்கள் ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்ற இராமர் யாத்திரையின் முக்கியமான மைல்கல்லாக இலங்கைச் சொற்பொழிவு அமையப்பெற்றுள்ளது. சித்திரகூடத்தில் ஆரம்பித்த இந்த யாத்திரை, இராமர் சொற்பொழிவின் இறுதி அத்தியாயமாக அயோத்தியாவில் நிறைவடையும்.ஆன்மீக தலைவர் முராரி பாபு அவர்கள் சொற்பொழிவின் போது உரையாற்றுகையில், “ஒரு நபர் தன்னுடன், அல்லது ஒரு சாதுவுடன் (குரு), அல்லது அவர்களுடைய குருவின் நினைவுடன் இருக்க வேண்டும். சாதுவின் கண்களை எவரும் ஏமாற்ற முடியாது. அவை ஊழல்களின்றி, நம்பிக்கை நிறைந்தவையாகவுள்ளன. உத்வேகத்தைப் பயன்படுத்தும் ஞானத்தைக் கொண்ட ஒருவரால் நிரந்தரமான பேறை அடைய முடியும்.”
பாபுவின் சீடரான சாந்கிரீப சனாதன சன்னிதானத்தின் மதன் பலிவால் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யாத்திரை, சனாதன தர்மத்தின் தூய்மை மற்றும் அரவணைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. ஏற்பாடுகள், சொற்பொழிவுகள் மற்றும் பிரசாதங்கள் என, யாத்திரையின் ஒவ்வொரு அம்சமும் இலவசமாக கிடைக்கப்பெற்றதுடன், ஆன்மீகம் என்பதற்கு விலை கிடையாது என்ற பாபுவின் வாழ்நாள் தத்துவத்தை உண்மையாகக் கடைப்பிடித்துள்ளது.
சத்தியம், நேசம், மற்றும் கருணை ஆகியவற்றின் காலத்தால் அழியாத விழுமியங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள இராமர் யாத்திரை, ராமசரிதமானஸத்தின் வெளிச்சத்தைப் பரப்பி, மனிதகுலத்தின் ஆன்மீகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற பாபுவின் இலக்கினை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இராமபிரானின் வனவாசத்தின் உத்வேகத்துடன், பாபுவின் இரண்டாவது பரிக்கிரம யாத்திரையாக இது அமைந்துள்ளது. 2021ல் இடம்பெற்ற அவரது முதலாவது யாத்திரையில் அயோத்தியாவிலிருந்து சித்திரக்கூடம் மற்றும் நந்திக்கிராம் செல்லும் பாதையை பின்பற்றியிருந்தார்.
கதாப்பிரசங்கம், சொற்பொழிவு, மற்றும் பரிமாறப்படும் உணவுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது, முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவருடைய கதாப்பிரசங்க நிகழ்வில் ஒவ்வொரு பக்தருக்கும் இலவச சைவ உணவு பிரசாதமாக வழங்கப்படுவதுடன், சமத்துவம் மற்றும் சமூகப் பகிர்வு ஆகியவற்றின் மீது பாபு அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அது பிரதிபலிக்கின்றது.
முராரி பாவு அவர்கள் தொடர்பான விபரங்கள்
முராரி பாபு அவர்கள் 1946ல் மகா சிவராத்திரி தினத்தில் பிறந்தார். இராமர் கதாப்பிரசங்களை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தி வருகின்ற அவர், குஜராத்தில் கிராமமொன்றின் மரநிழலின் கீழ், தனது 14வது வயதில் ஆன்மீகப் பயணத்தை ஆரம்பித்திருந்தார். அவரது பாட்டனாரான திரிபுவன தாஸ் அவர்களால் ராமசரிதமானஸத்திற்குள் அவர் ஈர்க்கப்பட்டார். இந்து சனாதன தர்மம் என பிரபலமாக அறியப்படுகின்ற வேத சனாதன தர்மத்திலிருந்து வெளிப்படும் பாபுவின் கதாப்பிரசங்கங்கள் அகில உலகின் அமைதி, உண்மை, நேசம், மற்றும்கருணை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. அனைத்து பிராந்தியங்கள், குலங்கள், மற்றும் மதங்களைச் சார்ந்தவர்களும் அவருடைய கதாப்பிரசங்கங்களில் பங்குபற்றி வருகின்றனர்.
கடந்த பல தசாப்தங்களில், இந்தியாவில் பல்வேறு நகரங்கள் மற்றும் யாத்திரைத் தலங்கள் மற்றும் இலங்கை, தென்னாபிரிக்கா,கென்யா,ஐக்கிய இராச்சியம்,அமெரிக்கா,பிரேசில்,அவுஸ்திரேலியா,இஸ்ரேல்,மற்றும் ஜப்பான் அடங்கலாக உலகெங்கிலும் 950க்கும் மேற்பட்ட இராமர் கதாப்பிரசங்கங்களை அவர் நிகழ்த்தியுள்ளதுடன்,பல மில்லியன் கணக்கான சீடர்களை ஈர்த்துள்ளார். புகையிரதம் மூலம் பிரயாணத்தை மேற்கொண்டு இந்தியாவில் அனைத்து 12 ஜோதிலிங்கங்களிலும் அண்மையில் கதாப்பிரசங்கங்களை நிகழ்த்தியுள்ள அவர், நியூயோர்க் மாநகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார். உலகினை வலம் வரும் நிகழ்வின் போது கப்பல் மற்றும் ஆகாய விமானம் ஆகியவற்றிலும் அவர் கதாப்பிரசங்கங்களை ஆற்றியுள்ளார்.
பாரம்பரியமான இடங்களுக்கு அப்பால்,பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மத்தியிலும் இராமர் கதாப்பிரசங்கங்களை பாபு அவர்கள் ஆற்றியுள்ளார். யுத்தத்தால் அழிவடைந்துள்ள உக்ரைன் மற்றும் இஸ்ரேல் அடங்கலாக, உலகெங்கிலும் அனர்த்தத்தால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பிரதேசங்களில் மனிதாபிமான முயற்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இக்கதாப்பிரசங்கங்களுக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் பிரசாதமாக சைவ உணவு இலவசமாக வழங்கப்படுவது வழக்கமானதொரு நடைமுறையாகும்.
20 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago